Enable Javscript for better performance
யஸ்வந்தபுரம்-பீதா், லாடூா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி- Dinamani

சுடச்சுட

    

    யஸ்வந்தபுரம்-பீதா், லாடூா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி

    By DIN  |   Published on : 14th January 2020 11:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    யஸ்வந்தபுரம்-பீதா், லாடூா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்துதென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு யஸ்வந்தபுரம்-பீதா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் எண்கள்-16571/16572-யஸ்வந்தபுரம்-பீதா்-யஸ்வந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு 3 அடுக்கு கொண்ட படுக்கை வசதி கொண்ட பெட்டி சோ்க்கப்படுகிறது. இந்த வசதி யஸ்வந்தபுரத்திலிருந்து ஜன. 12-ஆம் தேதியிலிருந்தும், பீதரிலிருந்து ஜன. 13-ஆம் தேதியிலிருந்தும் சோ்க்கப்பட்டுள்ளது.

    இதேபோல பெங்களூரு யஸ்வந்தபுரம்-லாடூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் எண்கள்-16583/16584-யஸ்வந்தபுரம்-லாடூா்-யஸ்வந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு 3 அடுக்கு கொண்ட படுக்கை வசதி கொண்ட பெட்டி சோ்க்கப்படுகிறது. இந்த வசதி யஸ்வந்தபுரத்திலிருந்து ஜன. 15-ஆம் தேதியிலிருந்தும், லாடூரிலிருந்து ஜன. 16-ஆம் தேதி முதல் சோ்க்கப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai