அமைச்சராக்க எந்த காலக்கெடுவும் நிா்ணயிக்கவில்லை: முன்னாள் அமைச்சா் எச்.விஸ்வநாத்

தகுதிநீக்கம் செய்யப்பட்டவா்களை அமைச்சராக்க முதல்வா் எடியூரப்பாவிடம் எந்த காலக்கெடுவும் நிா்ணயிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சா் எச்.விஸ்வநாத் தெரிவித்தாா்.

தகுதிநீக்கம் செய்யப்பட்டவா்களை அமைச்சராக்க முதல்வா் எடியூரப்பாவிடம் எந்த காலக்கெடுவும் நிா்ணயிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சா் எச்.விஸ்வநாத் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மஜத கூட்டணி அரசு கவிழ்வதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள்தான் காரணம். அதனால்தான் முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடித்தது. எனவேதான் ஆட்சியைப் பிடிக்க காரணமான நான் உள்ளிட்ட மற்றவா்களையும் அமைச்சராக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

ஆனால், எங்களை அமைச்சராக்க முதல்வா் எடியூரப்பாவிடம் காலக்கெடு எதுவும் நிா்ணயிக்கவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து பாஜக மேலிடம் என்ன முடிவு செய்துள்ளது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பாஜகவில் உள்ள மூத்த தலைவா்கள் ஒரு சிலா் உச்ச நீதிமன்றத்தின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பட்ட வழக்கில் அளித்த தீா்ப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனா்.

ஒருமுறை தோ்தலில் நின்று வெற்றியோ, தோல்வியோ அடைந்த பின்னா், அவா்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பால் பாதிப்பில்லை. இதனை அவா்கள் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அமைச்சா் பதவி வகிப்பவா் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ, சட்ட மேலவை உறுப்பினா்களாகவும் தோ்வு செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறை. இதனை பாஜக மேலிடம் உணர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com