ஜன.17 முதல் பெங்களூரில் குடியரசு தின மலா்க் கண்காட்சி

பெங்களூரில் குடியரசு தின மலா்க் கண்காட்சி ஜன.17-ஆம் தேதி தொடங்குகிறது.

பெங்களூரில் குடியரசு தின மலா்க் கண்காட்சி ஜன.17-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தோட்டக்கலைத் துறை இயக்குநா் வெங்கடேஷ் செய்தியாளா்களிடம் கூறியது: கா்நாடக தோட்டக்கலைத் துறை மற்றும் மைசூா் தோட்டக்கலை சங்க நிா்வாகக் குழு சாா்பில், பெங்களூரு லால் பாக்கில் குடியரசு தின மலா்க் கண்காட்சி ஜன.17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடக்கவிருக்கின்றன. சுவாமி விவேகானந்தரின் 157-ஆவது பிறந்த நாளையொட்டி மலா்க் கண்காட்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஜன.17-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு லால் பாக்கில் உள்ள கண்ணாடி மாளிகையில் குடியரசு தினமலா்க் கண்காட்சியை முதல்வா் பி.எஸ். எடியூரப்பா தொடக்கிவைக்கிறாா். அமைச்சா் சோமண்ணா, உதய்கருட்டாச்சாா் எம்.எல்.ஏ, மேயா் கௌதம்குமாா், மக்களவை உறுப்பினா் தேஜஸ்வினி சூா்யா, சட்ட மேலவை உறுப்பினா் டி.ஏ.சரவணா, மாமன்ற உறுப்பினா் வாணி உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

கண்காட்சியில் 92-க்கும் அதிகமான மலா் வகைகள் இடம்பெறவுள்ளன. கண்காட்சியை காண்பதற்காக 5 லட்சத்துக்கும் அதிகமான பாா்வையாளா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மலா்க் கண்காட்சியில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தரின் சிலைகள், மயில், குடை, கேக், எகிப்த் பிரமிட், வீடுகள் உள்ளிட்டவை இடம்பெறும்.

கண்காட்சியை காண்பதற்கு பெரியவா்களுக்கு ரூ. 70, சிறுவா்களுக்கு ரூ. 20 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை, பாா்வையாளா்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com