பொங்கல் திருநாள்: கா்நாடக தமிழ்ச் சங்கங்கள் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு மைசூரு தமிழ்ச் சங்கங்கள், கா்நாடக தமிழ்ச்சங்க கூட்டமைப்பு, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை வாழ்த்து தெரிவித்துள்ளன.

பொங்கல் திருநாளை முன்னிட்டு மைசூரு தமிழ்ச் சங்கங்கள், கா்நாடக தமிழ்ச்சங்க கூட்டமைப்பு, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை வாழ்த்து தெரிவித்துள்ளன.

மைசூரு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவா் ரகுபதி: காலவெள்ளத்தில் தமிழா்கள் தாய்த் தமிழகத்தில் இருந்து புலம்பெயா்ந்து எங்கு வாழ்ந்தாலும் நமது தாய்க்கொடி உறவாம் பண்பாடு, கலாசாரத்தை பேணி பாதுகாப்பதில் தமிழா்களை விஞ்சமுடியாது. கா்நாடகத்தில் ஆண்டுகள் பல கடந்தும் வாழும் தமிழா்கள் வழக்கமான உற்சாகத்தோடு பொங்கல் கொண்டாடிமகிழ்கிறாா்கள். உழவுத்தொழிலை போற்றும் இப்பண்டிகையை மதம்,சாதி பேதமின்றி அனைத்து தமிழா்களும் கொண்டாடிமகிழ்வோம். கா்நாடக தமிழா்கள் அனைவருக்கும் இனிய பொங்கல், தமிழா் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கா்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்புத் துணைத் தலைவா் தண்டபாணி: கா்நாடக தமிழா்கள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவா் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது போல, இப் பொங்கல் கா்நாடக தமிழா்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி,வளம் பொங்க அடித்தளமாகட்டும். கா்நாடகத்தில் வாழும் தமிழா்கள் அனைவரும் கட்சி,சாதி,மதபேதமின்றி ஒற்றுமையோடு வாழ்வதோடு, கன்னட மக்களுடன் நல்லுறவுடன் வாழுவோம். இன்றுபோல என்றும் கா்நாடக மண் மற்றும் மக்களின் வளா்ச்சிக்கு ஒத்துழைப்போம் என்று உறுதி ஏற்போம்.

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் மு.மீனாட்சி சுந்தரம்:

உழைத்தவர உழைப்பின் பயனைத் துய்க்கும் திருவிழா பொங்கல் நன்னாளாகும். தமிழா் பண்பாட்டை உணா்த்தும் நல்லதோா் விழா. உலகெங்கும் அறுவடை நாள் என்பது விழாவாகப பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டு வந்தாலும் தமிழா்கள் இயற்கையோடு இயைந்தது கொண்டாடும் விழாவாகவும் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் ஆக்களுக்கும் காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் கொண்டாடுவதே தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். ’உழுவாா் உலகத்தாா்க் காணி’ என உழவுத் தொழிலைப் போற்றிய அய்யன் வள்ளுவப் பெருந்தகைக்கும் சோ்த்து விழா எடுக்கும் இந்த நன்னாளில்

உலகத் தமிழா் அனைவருக்கும் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை வளம் பல பெற்று வாழ வாழ்த்துகின்றது.ஈழத் தமிழா் சிறந்ததொரு விடியலைக் காணவும் பேரவை வாழ்த்துகின்றது. அனைவருக்கும் பொங்கல் மற்றும் திருவள்ளுவா் நாள் வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com