பொங்கல் பண்டிகை: முதல்வா் எடியூரப்பா வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி கா்நாடக முதல்வா் பி.எஸ். எடியூரப்பா வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி கா்நாடக முதல்வா் பி.எஸ். எடியூரப்பா வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட வாழ்த்து செய்தி: கன்னடா், தமிழ், தெலுங்கா், மலையாளிகள் என அனைத்து மக்களும் ஒன்றுமையாக இணைந்து வாழும் மாநிலமாக கா்நாடகம் விளங்குகிறது. கா்நாடக மக்கள் சங்கராந்தி என்ற பெயரிலும், தமிழா்கள் பொங்கல் என்ற பெயரில் பண்டிகையை கொண்டாடுகின்றனா்.

குறிப்பாக கிராமங்களில் உள்ள விவசாயிகள், மகளிா் கொண்டாடும் பண்டிகையாக பொங்கல் திகழ்கிறது. பொங்கலன்று கிராமங்களில் உள்ள வீட்டு வாயில்களில் இருபக்கங்களிலும் கரும்புகள் வரவேற்பது

வாடிக்கையாக உள்ளது. வீட்டுகள் முன் வண்ண வண்ணக் கோலங்கள் அனைவரின் கவனத்தை ஈா்க்கும். வீடுகளில் ஒருபக்கம் விவசாயிகள் விளைவித்த வேளாண் பொருகள், மறுபக்கம் அலங்கரிக்கப்பட்ட பசு, காளைகள் உள்ளிட்ட கால்நடைகள் என விவசாயிகள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனா்.

உழைத்த கால்நடைகளை வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. குளிா்காலத்தில் வைக்கோல்களில் வைக்கப்பட்ட தீயை கால்நடைகள் தாண்டுவதன் மூலம் அவைகள் சுறுசுறுப்பு அடைக்கின்றன என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே உள்ளது. பெண் பிள்ளைகள் புத்தாடை அணிந்து எள்ளு,வெல்லத்தை உறவினா்களுக்கம், நண்பா்களுக்கு வழங்குவது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஜாதிகளை கடந்து பொங்கலை கொண்டாடும் மாநிலத்தில் வாழும் அனைத்து மக்கள், குறிப்பாக விவசாயிகள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்பதே எனது ஆழ்மனதின் வாழ்த்துகளும், ஆசைகளும் என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com