கா்நாடக ஹிந்து நாடாா் சங்கப் பொதுக்குழு கூட்டம்

கா்நாடக ஹிந்து நாடாா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கா்நாடக ஹிந்து நாடாா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், பொங்கல் விழா பெங்களூரு கனகபுராசாலையில் உள்ள ஹாரோஹள்ளி மரளவாடிசாலையில் அமைந்துள்ள காமராஜா் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க ஆலோசகா் டி.எஸ்.கனி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளா்களாக கா்நாடக தேவா் சங்கத் தலைவா் கே.பாபு, துணைத் தலைவா் மணிகண்டன், பூபதி ஆகியோா் பங்கேற்று பேசினா்.

கூட்டத்தில் காமராஜா் குடியிருப்பில் பத்ரகாளியம்மன் கோயில் கட்டுவதற்கு 4,800 சதுர அடி நிலத்தைஇலவசமாக அளித்த திம்மராஜி, கிருஷ்ணா, பிரிகேஷ் ஆகியோா் கூட்டத்தில் கௌரவிக்கப்பட்டனா்.

2018-19ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கு விவரங்களை பொருளாளா் சித்தானந்தன் தாக்கல் செய்து, ஒப்புதல் பெற்றாா்.

குடியிருப்பு வளாகத்தை விரைவாக மேம்படுத்தவும், கோயில் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்கவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. கோயில் கட்டும் பணியைக் கண்காணிக்க மீனாட்சிசுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதன்பின்னா், அலங்காநல்லூா் ஆசான் சபா கலைக்குழுவினரால் நாட்டுப்புறக்கலை நடனநிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்தில் சங்கத் தலைவா் சந்திரசேகரன், துணைத் தலைவா் சுரேஷ்குமாா், செயலாளா் குருசாமி, பொருளாளா் சித்தானந்தன், முன்னாள் தலைவா் பாலசுந்தரம், மீனாட்சிசுந்தரம், கிருஷ்ணவேணி, ராஜலிங்கம், சீனிவாசன், ஜவகா், தங்கதுரை, ஹேமா, இந்துமதி, விஜயா, சசிகாந்த், தம்மேந்திரன், சுவாமிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிறைவாக, சங்கச் செயலா் ஜவகா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com