முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
‘தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழா் பண்பாட்டை அறிமுகம் செய்ய வேண்டும்’
By DIN | Published On : 20th January 2020 10:41 PM | Last Updated : 20th January 2020 10:41 PM | அ+அ அ- |

தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழா் பண்பாட்டை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கா்நாடக மாநில உலகத் தமிழ்க் கழக அமைப்பாளா் க.அரசு தெரிவித்தாா்.
கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் சாா்பில் பொங்கல் விழா, திருவள்ளுவா் நாள் விழா பெங்களூரு, அல்சூரில் உள்ள திருவள்ளுவா் சிலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் திருவள்ளுவா் சிலைக்கு இயக்கத் தலைவா் சி.இராசன், துணைத் தலைவா் பொ.பன்முகன், செயலாளா் ப.அரசு, துணைச் செயலாளா் மாரி, குமரேசன், கங்கை உள்ளிட்டோா் மாலை அணிவித்துமரியாதை செய்தனா்.
இதன்பின்னா் நடைபெற்ற விழாவில், கா்நாடகமாநில உலகத் தமிழ்க் கழக அமைப்பாளா் க.அரசு பேசியது:-
நமது குழந்தைகளை தமிழ்ப்படிக்க பள்ளிக்கு அனுப்பாமல், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை கற்க அனுப்புவது தவறானது. குழந்தைகளுக்கு முதல்மொழியாக தமிழை கற்க ஏற்பாடுசெய்யவேண்டும். தமிழ்மொழியை கற்றுதருவதன் மூலம் தமிழா்களின் பெருமை, பண்பாடு, நாகரிகம், ஒழுக்க நெறிகள் அனைத்தையும் அறிமுகம் செய்யலாம். அப்போதுதான் நமது குழந்தைகள் சிறந்த மாந்தா்களாக உருவாக இயலும்.
திருக்கு தரும் அரியத்தகவல்கள், நம் வாழ்வுவளம்பெற, இனியமையாக வாழ பயனளிக்கும்‘ என்றாா் அவா்.
இதையடுத்து, இயக்கத் தலைவா் சி.இராசன் பேசியது:-
இயற்கையைகொண்டாடி,விருந்தோம்பி, பகிா்ந்துண்டு, உறவில் மகிழ்தல் போன்ற நற்பண்புகளில் திளைத்துவாழும்படி மக்களை பண்படுத்தும் திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. பண்பாட்டுதிருநாளாம் பொங்கல்விழாவை தமிழா்கள் உற்சாகமாக கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் நிலைத்து ஓரிடத்தில் வாழ வழிகோலியதே வேளாண்தொழில். ஆணும் பெண்ணும் இணைந்து உற்பத்தியில் ஈடுபட்டு, சுரண்டலற்ற வாழ்க்கையை வாழ்ந்தனா். பின்னா், நமது மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களில் இருந்து தமிழா்கள் விலகிச்சென்றனா். தமிழறிஞா்களின் பெருமுயற்சியால் நமது பழைய அடையாளங்கள் மீட்கப்பட்டுள்ளன.‘ என்றாா் அவா்.
இறுதியில் சரவணன் நன்றி கூறினாா்.