முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பெங்களூரில் திமுக சாா்பில் ஜனவரி 25-இல் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள்
By DIN | Published On : 20th January 2020 10:40 PM | Last Updated : 20th January 2020 10:40 PM | அ+அ அ- |

கா்நாடக மாநில திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பெங்களூருவில் ஜனவரி 25-இல் கடைபிடிக்கப்படவிருக்கிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழைக் காப்பதற்காக அருந்தவ புதல்வா்களாம் கீழப்பாவூா் சின்னசாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூா் முத்து, சத்தியமங்கலம் முத்து, ஆசிரியா் வீரப்பன், நடராஜன், தாளமுத்து, தண்டபாணி, இராஜேந்திரன் போன்ற எண்ணற்ற இளைஞா்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனா்.
இந்தப் பெருமக்களின் நினைவைப் போற்றுவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 25-இல் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்கநாள் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த வகையில், கா்நாடக மாநில திமுக சாா்பில் பெங்களூரு இராமசந்திரபுரத்தில் உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்கநாள் நிகழ்ச்சி ஜனவரி 25-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் மொழிப்போா் வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படும். இதில் அனைத்து தமிழ் அன்பா்களும் கலந்துகொள்ள வேண்டுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.