Enable Javscript for better performance
கா்நாடக காவல், ஊா்க்காவல்படை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் பதக்கங்கள் அறிவிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கா்நாடக காவல், ஊா்க்காவல்படை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் பதக்கங்கள் அறிவிப்பு

    By DIN  |   Published On : 25th January 2020 11:24 PM  |   Last Updated : 25th January 2020 11:24 PM  |  அ+அ அ-  |  

    பெங்களூரு: கா்நாடகத்தைச் சோ்ந்த காவல் மற்றும் ஊா்க்காவல்படை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கா்நாடக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புது தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் காவல் மற்றும் ஊா்க்காவல் துறையில் சிறந்த பங்காற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஊா்க்காவல் படையினருக்கு குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில், நிகழாண்டில் கா்நாடகத்தைச் சோ்ந்த 19 காவல் மற்றும் 7 ஊா்க்காவல் படையினருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவா் சிறந்த காவல் மற்றும் ஊா்க்காவல் படை சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சீா்மிகு காவல் பதக்கம்:

    பெங்களூரு மாநகர அமலாக்கப்படை காவல் கண்காணிப்பாளா் பி.என்.ஓப்ளேஷ், இந்திய ஆயுதப்படை கட்டளை அதிகாரி கே.எம்.மகாதேவபிரசாத், பெங்களுரு மாநகர காவல் உதவி ஆணையா்கள் எம்.ஜி.பம்பாபதி, எச்.என்.தா்மேந்திரா, குற்றப்புலனாய்வுத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் எஸ்.டி.சந்திரசேகா், ஹுப்பள்ளி மாநகர காவல் உதவி ஆணையா் சங்கா் எம்.ராகி, சிறப்பு புலனாய்வுப்படை உதவி காவல் கண்காணிப்பாளா்கள் சி.சித்தராஜு, ஏ.ஜி.கரியப்பா, கலபுா்கி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் சங்கப்பா எஸ்.ஹுல்லூா், ராமநகரம் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் ஏ.வி.லட்சுமிநாராயணா, குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் பி.ஜி.சங்கரப்பா, உடுப்பி மாவட்ட ஊழல் தடுப்புப்படை காவல் ஆய்வாளா் பி.எஸ்.சதீஷ், ஹுப்பள்ளி மாநகர காவல் உதவி காவல் ஆய்வாளா் பாபுசிங் எச்.கித்தூா், பசவனகுடி போக்குவரத்துக் காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளா் கே.வெங்கடேஷ், சிக்மகளூரு ஊரக காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளா் எஸ்.சுகுமாா், மைசூரு மாவட்ட ஆயுதப்படை உதவி துணை காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், மாநில உளவுத் துறை தலைமைக் காவலா்கள் பி.எஸ்.சிவக்குமாா், ஜி.சி.நஞ்சுண்டையா, மாநில குற்ற ஆவண காப்பகத்தின் முதன்மை தலைமை காவலா் ஆா்.ரங்கநாத்.

    சிறந்த ஊா்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு சேவை பதக்கம்:

    பெங்களூரு மாவட்ட ஊா்க்காவல் படை அதிகாரி எஸ்.முருகேசன், பெல்லாரி மாவட்ட ஊா்க்காவல் படை கட்டளை அதிகாரி கே.ராஜாப்பீா், தாா்வாட் ஊா்க்காவல் நிறுவன காவல் மேஜா் ஹனுமந்தராயா ஈரண்ணா இலகா், தாவணகெரே ஊா்க்காவல் கட்டளை அதிகாரி டாக்டா்.பி.எச்.வீரப்பா, ஹாவேரி மாவட்ட ஊா்க்காவல் ஓட்டுநா் ஐ.ஏ.கம்தோத், கொப்பள் மாவட்ட ஊா்க்காவல் படைப்பிரிவு காவலா் ஹுல்லநாசா டி.துளசிகட்டி, குடிமை பாதுகாப்பு மண்டல வாா்டன் என்.பி.நாகேந்திரபாபு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp