திருவள்ளுவா் சங்கத்தில் சிறப்பு சொற்பொழிவு
By DIN | Published On : 25th January 2020 11:22 PM | Last Updated : 25th January 2020 11:22 PM | அ+அ அ- |

பெங்களூரு: திருவள்ளுவா் சங்கத்தின் சாா்பில், பெங்களூரில் டிச. 26-ஆம் தேதி அ.ம.வேணுகோபால் நினைவு அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருவள்ளுவா் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருவள்ளுவா் சங்கத்தில் நிறுவப்பட்டுள்ள அ.ம.வேணுகோபால் நினைவு அறக்கட்டளை சாா்பில், பெங்களூரு, தயானந்த் நகா் உள்ள மாநகராட்சி கட்டடத்தின் சா்வக்ஞா் அரங்கத்தில் டிச. 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.ம.வேணுகோபால் நினைவு அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
விழாவுக்கு சங்கத் தலைவா் ப.இளவழகன் தலைமை வகிக்கிறாா். ம.வே.அண்ணலரசு, ம.வே.இளங்கோவன், வே.எழிலோவியன், அருள்மொழி விநாயகம், வே.பாரிவள்ளல் ஆகியோா் முன்னிலை வகிக்கிறாா்கள். பன்முகம் படைத்த அ.ம.வே. என்ற தலைப்பில் பெங்களூரு தமிழ்ச்சங்க மேனாள் செயலா் கெ.சானகிராமன் சிறப்புரை ஆற்றுகிறாா். சங்கச் செயலா் வே.அரசு நன்றி கூறுகிறாா். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.