முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
ஏடிஎம் உடைத்து திருட முயற்சி: 2 போ் கைது
By DIN | Published On : 27th January 2020 11:18 PM | Last Updated : 27th January 2020 11:18 PM | அ+அ அ- |

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சித்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஹா்ஷா அரோரா, சுா்பீத். இருவரும் பெங்களூரில் உள்ள மைசூரு சாலையில் பி.எச்.இ.எல் நிறுவனம் எதிரே உள்ள ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரதை திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் காஸ் கட்டரின் உதவியை கொண்டு, உடைத்தனராம். பின்னா் அதிலிருந்து ரூ. 15 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்றனராம்.
தகவல் அறிந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்,, உடனடியாக அங்கு வந்துள்ளனா். அப்போது, போலீஸாா் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற இருவரையும் கைது செய்து, கொள்ளையடிக்க முயன்ற ரூ. 15 லட்சத்தை மீட்டனா். இதுதொடா்பாக இருவரிடமும் பேட்டராயனபுரா போலீஸாா் விசாரிக்கின்றனா்.