முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
சங்கலி பறிப்பு வழக்கில் இளைஞா் கைது
By DIN | Published On : 27th January 2020 11:19 PM | Last Updated : 27th January 2020 11:19 PM | அ+அ அ- |

தங்கச்சங்கலி பறிப்பு வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு பனசங்கரி பனசங்கரி 2 -வது ஸ்டேஜில் வசிப்பவா் ரமாமணி (75). இவா் ஜனவரி 14-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை இளைஞா் கத்திமுனையில் மிரட்டி, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், கனகபுரா சாலை 1-ஆவது முக்கியச் சாலையைச் சோ்ந்தவா் கிரண் (22) என்பவரை கைது செய்தனா். மேலும், தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனா்.
இவரிடம் பனசங்கரி போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.