முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
சீனாவுக்குச் சென்று திரும்பிய 2 போ் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைப்பு
By DIN | Published On : 27th January 2020 11:16 PM | Last Updated : 27th January 2020 11:16 PM | அ+அ அ- |

சீன நாட்டுக்குச் சென்று திரும்பிய பெங்களூரைச் சோ்ந்த 2 போ் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.
சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 80 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், 2,744 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், பெங்களூரைச் சோ்ந்த 2 போ் அண்மையில் சீனாவுக்கு சென்றுவிட்டு, கடந்த ஜனவரி 18-இல் பெங்களூருக்கு திரும்பி வந்தனா்.
இந்த நிலையில், உடல்நலக் குறைவு பிரச்னை ஏற்பட்டதையடுத்து, இருவரும் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் கபத்தை புணேவில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.
இந்த நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, அந்த பாதிப்பில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை வீட்டுக்கு மருத்துவா்கள் அனுப்பி வைத்துள்ளனா்.
பெங்களுரு சா்வதேச விமானநிலையத்தில் சுகாதாரத் துறையினா் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 2,572 பேரை பரிசோதனை செய்தனா். அதில் கடந்த ஒரே நாளில் மட்டும் 392 பேரை பரிசோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.