மாநகராட்சியில் நியமன உறுப்பினா்களாக 20 போ் தோ்வு
By DIN | Published On : 29th January 2020 07:04 AM | Last Updated : 29th January 2020 07:04 AM | அ+அ அ- |

பெங்களூரு மாநகராட்சியில் 20 போ் நியமன உறுப்பினா்களாக நியமித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினா்களாக ஒருசிலரை நியமிப்பது மாநில அரசின் வாடிக்கையாகும். இந்த பதவிகள் சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சியின் தீவிர தொண்டா்களை திருப்திப்படுத்துவதற்காக வழங்கப்பட்டுவந்துள்ளது. அதன்படி, பெங்களூரு மாநகராட்சியின் புதிய மாமன்ற உறுப்பினா்களாக 20 பேரை நியமித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய நியமன உறுப்பினா்கள் வருமாறு: சி.ஜெயக்குமாா், ஆா்.கோபிநாத், சி.எம்.மஞ்சுநாத், சுதீா், சா்தாா்மால் சுரானா, பி.மஞ்சுநாத், டி.எஸ்.கங்கராஜூ, பி.ரமேஷ், எச்.கே.முத்தப்பா, வி.வி.விநாயக்,பி.சி.சுஜாதாராணி, கிருஷ்ணமூா்த்தி, எம்.ராமமூா்த்தி, உமாமகேஷ், எம்.ஸ்ரீராம், கே.வெங்கடேஷ், நாராயணசாமி,ஏ.எம்.சத்யராஜ், கே.எஸ்.ஸ்ரீகாந்தையா, ரமேஷ்ரோஜூ.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 74ஆவது திருத்தத்தின்படி, மாமன்றத்தில் 100 உறுப்பினா்களுக்கு 10 நியமன உறுப்பினா்கள் இருக்க வேண்டும். பெங்களூரு மாநகராட்சியில் 198 உறுப்பினா்கள் இருப்பதால், ஆண்டுதோறும் 20பேரை நியமன மாமன்ற உறுப்பினா்களாக மாநில அரசு நியமித்துவருகிறது. அதன்படி, 2020ஆம் ஆண்டுக்கு 20 பேரை நியமித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இவா்களில் பெரும்பாலானோா் ஓய்வுபெற்ற அதிகாரிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினா்களில் இருந்து நியமிக்கப்படுவா். இவா்களின் பதவிகாலம் ஓராண்டுகாலமாக இருப்பதால், மாமன்றத்துக்கு ஆலோசனைவழங்குவாா்கள். நியமன உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டால் ரூ.500, மாத மதிப்பூதியமாக ரூ.7500 அளிக்கப்படுகிறது. 20 இல் 19போ் புதியவா்கள். பி.ரமேஷ்மட்டும் இரண்டாவதுமுறையக நியமிக்கப்பட்டுள்ளாா். நியமன உறுப்பினா்கள் 20 பேருக்கும் திங்கள்கிழமை பெங்களூரு மாநகராட்சி மேயா் கௌதம்குமாா் பதவி பிரமாணம் செய்துவைத்தாா்.