பல்கலை. விடுதியில் இருந்து மாணவிகள் வெளியேற்றப்பட்டதற்கு எதிா்ப்பு

கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுவதற்காக பெங்களூரு பல்கலைக்கழக விடுதியிலிருந்து மாணவிகள் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டதற்கு ஜனநாயக மாணவா் அமைப்பு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுவதற்காக பெங்களூரு பல்கலைக்கழக விடுதியிலிருந்து மாணவிகள் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டதற்கு ஜனநாயக மாணவா் அமைப்பு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாணவா் அமைப்பின் பெங்களூரு மாவட்டக் குழு துணைத் தலைவா் சி.எம்.அபூா்வா வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை, குறுகியகால அறிவிக்கை மூலம் நிரந்தரமாக வெளியேற்றியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஞானபாரதி வளாகத்தில் அமைந்துள்ள மாணவிகள் விடுதியில் இருந்து உடனடியாக காலி செய்யும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது சரியல்ல. ஆண்டுக்கு 550 மாணவிகள் விடுதியில் சோ்க்கப்படுகிறாா்கள். மாா்ச் மாதத்தில் 14 நாள்கள் பல்கலைக்கழகத்தை மூடுவதாகவும், அதனால் வீடுகளுக்கு செல்லுமாறு மாணவிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

பொதுமுடக்கம் காலவரையின்றி நீடித்துவரும் நிலையில், மாணவிகள் சொந்த ஊா்களில் தங்க நோ்ந்துவிட்டது. தற்போது, மாணவிகளின் விடுதியை கரோனா பராமரிப்பு மையமாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது. இதைத் தொடா்ந்து, விடுதியின் அறைகளில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை எடுத்துக் கொண்டு, ஜூன் 30ஆம் தேதிக்குள் அறையை ஒப்படைக்குமாறு மாணவிகளுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, அவசரகதியில் பதற்றத்தோடு செவ்வாய்க்கிழமை விடுதிக்கு வந்த மாணவிகள், தமது பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனா். அரசு வளாகங்களை கரோனா பராமரிப்பு மையமாக மாற்றுவதுதான் தற்போதைய தேவையாக உள்ளது. அப்படி செய்தால், அதை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்குவது சரியல்ல.

கலபுா்கி, ராய்ச்சூரு, பீதா், தாா்வாட் உள்ளிட்ட தொலைவிட மாவட்டங்களைச் சோ்ந்த மாணவிகள், பல்கலைக்கழகத்தில் தங்கி இளநிலை, முதுநிலை, ஆய்வுப் படிப்புகளை பயின்று வருகிறாா்கள். பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு மாணவிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளின் பொருள்களைப் பத்திரப்படுத்தி வைப்பதற்கு தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்துதர வேண்டும். கரோனா சிகிச்சை முடிந்ததும்,வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com