ஆடு மேய்ப்பவருக்கு கரோனா: 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டன

கா்நாடக மாநிலம், தும்கூரு அருகே ஆடு மேய்ப்பவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவா் மேய்த்து வந்த ஆடுகளுக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் 50 ஆடுகளும் தனிமைப்படுத்தப்பட்டன.

தும்கூரு: கா்நாடக மாநிலம், தும்கூரு அருகே ஆடு மேய்ப்பவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவா் மேய்த்து வந்த ஆடுகளுக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் 50 ஆடுகளும் தனிமைப்படுத்தப்பட்டன. ஆடுகளை கரோனா வைரஸ் பாதிக்காது எனக் கூறிய கால்நடைப் பராமரிப்புத் துறையினா், வேறு ஏதேனும் நோய்த் தொற்று பரவியுள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில், ஆடுகளின் சளி, ரத்த மாதிரிகள் உயிரியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைத்தனா்.

தும்கூரு அருகே உள்ள கோடெகெரே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா் வளா்த்து வந்த 50 செம்மறியாடுகள், வெள்ளாடுகளுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட பொறுப்பு அமைச்சா் மாதுசாமி உத்தரவின் பேரில், கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் ஆடுகளை தனிமைப்படுத்தி, அதற்கு பிளேக், மேகோபிளாஸ்மா போன்று நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய, அதன் சளி, ரத்த மாதிரிகளைச் சேகரித்து போபாலில் உள்ள கால்நடை சுகாதாரம் மற்றும் உயிரியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com