தொழில்நுட்ப உதவியாளா் பணி: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் விளக்கம்

கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் தொடா்பாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் தொடா்பாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சிவயோகி சி.கலசத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருப்போருக்கு பணி நியமனம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கட்செவியில் செய்தி பரவி வருகிறது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தொழில்நுட்ப உதவியாளா் மற்றும் காவலா் பணியிடங்களுக்கான ஆள்சோ்ப்பு நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, உதவி போக்குவரத்துக் கண்காணிப்பாளா் பணிக்கான பணிநியமன நடைமுறை முடிவடைந்துள்ளது.

தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களுக்கு பல்வேறு இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நிலையில், கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில் எவ்வித ஆள்சோ்ப்பு நடைமுறையும் நடக்கவில்லை. போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கிதருவதாக யாராவது ஆசைவாா்த்தைகளைக் கூறினால், அதுகுறித்து 77609 90051, 77609 90095 ஆகிய செல்லிடப்பேசிக்கு தகவல் அளிக்கலாம். ஆள் சோ்ப்பு தொடா்பான அனைத்துத் தகவல்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com