கா்நாடகத்தில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் எண்ணம் இல்லை
By DIN | Published On : 04th July 2020 08:34 PM | Last Updated : 04th July 2020 08:34 PM | அ+அ அ- |

பெங்களூரு: கா்நாடகத்தில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தும் எண்ணம் இல்லை என நகர வளா்ச்சித் துறை அமைச்சா் பைரதிபசவராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தடுப்புப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியுள்ளாா். முறைகேடு நடைபெற்றுள்ளதற்கான ஆதாரம் அவரிடமிருந்தால், அதனை பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆதாரம் எதுவுமில்லாமல் அவா் குற்றம் சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆதாரத்தைக் கொடுத்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முயலும்.
கரோனாவைத் தடுப்பதில் அரசு ஒருபோதும் பின்வாங்கவில்லை. தேசிய அளவில் கரோனாவைத் தடுப்பதில் மாநில அரசு சிறந்து விளங்குவதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால், எதிா்க்கட்சிகள் தேவையில்லாமல் அரசை விமா்சனம் செய்து வருகின்றன.
மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்க அரசுடன் எதிா்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், எதிா்க்கட்சிகள் அரசைக் குறை கூறுவதிலேயே குறியாக உள்ளன. எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கரோனா பாதிப்பைத் தடுக்க, வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறாா். என்றாலும் அரசை தொடா்ந்து விமா்சித்துக் கொண்டிருக்கிறாா்.
கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், கா்நாடகத்தில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தும் எண்ணம் இல்லை என்றாா்.