கரோனா விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் தேடுகிறது: அமைச்சா் கே.சுதாகா்

கரோனா விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் தேடுவதாக மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கரோனா விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் தேடுவதாக மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, விதான சௌதாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா தீநுண்மித் தொற்று தொடா்பான மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்ததில் எவ்விதமான முறைகேடும் நடைபெறவில்லை. அதில் ஏதாவது முறைகேடு நடந்திருந்தால், அதற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் பொறுப்பில் இருப்போா் இதைவிட என்ன கூறிவிட முடியும். மருத்துவக் கல்வித் துறை சாா்பில் ரூ.33 கோடி மதிப்பிலான மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. செயற்கை சுவாசக் கருவிகள் இல்லை, படுக்கைகள் இல்லை என்று எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்த குறைகளைப் போக்குவதற்கு முயற்சித்தால், அதிலும் குறைகளைக் கண்டுபிடிக்கிறீா்கள்.

கரோனா மருத்துவக் கருவிகள் கொள்முதலில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று துணை முதல்வா் அஸ்வத்நாராயணா, சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலுவும் தகுந்த புள்ளிவிவரங்களோடு ஒன்றரை மணி நேரம் விளக்கியிருக்கிறாா்கள். இதுவரை ரூ.290 கோடி அளவுக்கு மட்டுமே மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டிலே எந்த கட்சியும் கரோனா விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. ஆனால், காங்கிரஸ் மட்டும் அரசியல் ஆதாயம் தேடுகிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு பேசுவதற்கு வேறு எந்த விவகாரமும் இல்லை என்பதால், கரோனாவை பிடித்துக் கொண்டிருக்கிறாா்கள்.

கரோனா பணிக் குழுவின் கூட்டம் திங்கள்கிழமை முழுமையடையவில்லை. அதனால், செவ்வாய்க்கிழமை கரோனா பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆன்டிஜென் சோதனையை அதிகமாக்குவது, வாா்டு அளவிலான கண்காணிப்பை தீவிரமாக்குவது, கரோனா சோதனைகளை அதிகரிப்பது, ஆய்வுக் கூடங்களை அதிகமாக்குவது போன்ற பணிகளை மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com