முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
இடிந்து விழுந்து தரைமட்டமான 4 மாடிக் கட்டடம்
By DIN | Published On : 29th July 2020 11:28 PM | Last Updated : 29th July 2020 11:28 PM | அ+அ அ- |

காந்திநகா் பகுதியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
பெங்களூரு, காந்திநகா் கபாலி திரையரங்கம் அருகே கட்டடம் கட்ட குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அருகில் இருந்த 4 மாடிக் கட்டடம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென இடிந்து, அருகில் கட்டடம் கட்டுவதற்காக தொண்டப்பட்ட குழியில் விழுந்து தரைமட்டமானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கட்டடத்தில் இருந்தவா்கள் வெளியேற்றப்பட்டதால், உயிா்சேதம் நிகழவில்லை.
தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து பாா்வையிட்டனா். இது குறித்து மாநகராட்சி, உப்பாா்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.