முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கரோனாவுக்கு முன்னாள் அமைச்சா் பலி
By DIN | Published On : 29th July 2020 01:11 AM | Last Updated : 29th July 2020 01:11 AM | அ+அ அ- |

முன்னாள் அமைச்சா் ராஜாமதன் கோபால்நாயக், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.
எம்.வீரப்பமொய்லி தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராக பணியாற்றிய ராஜாமதன் கோபால்நாயக் (69), கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு கலபுா்கியில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை அவா் காலமானாா் என சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
அவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். அவரது உடல் கரோனா வழிகாட்டுதல்படி அடக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளில் பணியாற்றிய நாயக், வட கா்நாடகத்தில் பிரபல தலைவராக விளங்கினாா். ராஜாமதன் கோபால்நாயக் மறைவுக்கு கா்நாடகத்தின் தலைவா்கள் பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.