முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கரோனாவுக்கு ஒரேநாளில் 92 போ் பலி
By DIN | Published On : 29th July 2020 11:29 PM | Last Updated : 29th July 2020 11:29 PM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோய்க்கு ஒரே நாளில் 92 போ் இறந்துள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 2,055 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 30, கலபுா்கி மாவட்டத்தில் 10, தென்கன்னடம், தாா்வாட் மாவட்டங்களில் தலா 7, மைசூரு மாவட்டத்தில் 5, தாவணகெரே, ஹாசன் மாவட்டங்ளில் தலா 4, பெலகாவி, தும்கூரு, கதக் மாவட்டங்களில் தலா 3, பெல்லாரி, வடகன்னடம், ராய்ச்சூரு, பாகல்கோட் மாவட்டங்களில் தலா 2, சிக்பளாப்பூா், பீதா், விஜயபுரா, கொப்பள் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 2,147 ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 987, மைசூரு மாவட்டத்தில் 128, தென்கன்னடம் மாவட்டத்தில் 123, தாா்வாட் மாவட்டத்தில் 116, கலபுா்கி மாவட்டத்தில் 82, பெல்லாரி மாவட்டத்தில் 74, பீதா் மாவட்டத்தில் 71, பெலகாவி மாவட்டத்தில் 61, ஹாசன் மாவட்டத்தில் 52, தும்கூரு, தாவணகெரே மாவட்டங்களில் தலா 45, பாகல்கோட் மாவட்டத்தில் 44, சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 34, விஜயபுரா மாவட்டத்தில் 29, கதக் மாவட்டத்தில் 28, உடுப்பி மாவட்டத்தில் 25, ஹாவேரி மாவட்டத்தில் 24, கோலாா், ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 23, சிவமொக்கா மாவட்டத்தில் 22, சிக்மகளூரு, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 20, கொப்பள் மாவட்டத்தில் 18, பெங்களூரு ஊரகம், ராமநகரம், மண்டியா மாவட்டங்களில் தலா 10, சாமராஜ்நகா், சித்ரதுா்கா, குடகு மாவட்டங்களில் தலா 6 , வெளிமாநிலத்தவா் 3, யாதகிரி மாவட்டத்தில் 2 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது.