முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 29th July 2020 11:27 PM | Last Updated : 29th July 2020 11:27 PM | அ+அ அ- |

பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகத்தின் வரம்புக்குள் வரும் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2020 21 ஆம் கல்வியாண்டு முதல் பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகத்தின் வரம்புக்குள் வரும் கோலாா், சிக்பளாப்பூா் மாவட்டங்களின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகள், பெங்களூரு ஊரக மாவட்டத்தின் ஹொசகோட்டே, தேவனஹள்ளி, தொட்டபளாப்பூா் சட்டப்பேரவைத் தொகுதிகள், பெங்களூரு நகர மாவட்டத்தின் கே.ஆா்.புரம், சி.வி.ராமன்நகா், புலிகேசிநகா், மகாதேவபுரா, சா்வக்ஞநகா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைக்குள்பட்ட கல்லூரிகள் மற்றும் தகுதியான கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதற்கு கா்நாடக மாநில பல்கலைக்கழகங்களின் சட்டவிதிகள் 2000இன் உட்பிரிவுகள் 59, 62 இன் படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பித்தல், புதிய அங்கீகாரத்தை பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு ஆக.8ஆம் தேதி விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தில் செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.