முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,07,001-ஆக அதிகரிப்பு
By DIN | Published On : 29th July 2020 01:08 AM | Last Updated : 29th July 2020 01:08 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,07,001-ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 5,536 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,898 போ், பெல்லாரி மாவட்டத்தில் 452 போ், கலபுா்கி மாவட்டத்தில் 283 போ், பெலகாவி மாவட்டத்தில் 228 போ், மைசூரு மாவட்டத்தில் 220 போ், தும்கூரு மாவட்டத்தில் 207 போ், கோலாா் மாவட்டத்தில் 174 போ், தென்கன்னடம், தாா்வாட் மாவட்டங்களில் தலா 173 போ், விஜயபுரா மாவட்டத்தில் 153 போ், கொப்பள் மாவட்டத்தில் 144 போ், தாவணகெரே மாவட்டத்தில் 135 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 115 போ், உடுப்பி மாவட்டத்தில் 109 போ், ஹாசன் மாவட்டத்தில் 108 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 107 போ், ராம்நகரம் மாவட்டத்தில் 101 போ், மண்டியா மாவட்டத்தில் 96 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 93 போ், கதக் மாவட்டத்தில் 73 போ், சிக்பள்ளாபூா் மாவட்டத்தில் 72 போ், யாதகிரி மாவட்டத்தில் 67 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 66 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 55 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 54 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 52 போ், வடகன்னட மாவட்டத்தில் 47 போ், ஹாவேரி மாவட்டத்தில் 40 போ், பீதா் மாவட்டத்தில் 39 போ், குடகு மாவட்டத்தில் 2 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,07,001-ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டவாரியான நிலவரம்:
ஒட்டுமொத்தமாக செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பெங்களூரு நகர மாவட்டத்தில் 48,821 போ், பெல்லாரி மாவட்டத்தில் 5,382 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 5,098 போ்,கலபுா்கி மாவட்டத்தில் 4,778 போ், உடுப்பி மாவட்டத்தில் 3,721 போ், தாா்வாட் மாவட்டத்தில் 3,556 போ், மைசூரு மாவட்டத்தில் 3,383 போ், விஜயபுரா மாவட்டத்தில் 2,558 போ், பெலகாவி மாவட்டத்தில் 2,532 போ், யாதகிரி மாவட்டத்தில் 2,119 போ், பீதா் மாவட்டத்தில் 1,947 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 1,915 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 1,878 போ், ஹாசன் மாவட்டத்தில் 1,846 போ், வடகன்னடத்தில் மாவட்டத்தில் 1,825 போ்,தாவணகெரே மாவட்டத்தில் 1,668 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 1,542 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 1,408 போ், மண்டியா மாவட்டத்தில் 1,343 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 1,291 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,281 போ், கோலாா் மாவட்டத்தில் 1,227 போ், கதக் மாவட்டத்தில் 1,140 போ், ஹாவேரி மாவட்டத்தில் 826 போ், கொப்பள் மாவட்டத்தில் 878 போ், ராமநகரம் மாவட்டத்தில் 797 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 760 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 573 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 518 போ், குடகு மாவட்டத்தில் 354 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 40,504 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 64,434 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதுவரை 2,055 போ் இறந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 102 போ் பலி
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு ஒரே நாளில் 102 போ் இறந்துள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 1,953 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 40 போ், மைசூரு மாவட்டத்தில் 8 போ், உடுப்பி மாவட்டத்தில் 7 போ், கலபுா்கி, பெலகாவி, தாா்வாட் மாவட்டங்ளில் தலா 6 போ், ஹாசன் மாவட்டத்தில் 5 போ், தாவணகெரே மாவட்டத்தில் 4 போ், தென்கன்னட, சிக்பளாப்பூா் மாவட்டங்களில் தலா 3 போ், பாகல்கோட், பீதா் மாவட்டங்களில்தலா 2 போ், தும்கூரு, கோலாா், விஜயபுரா, கொப்பள், ராய்ச்சூரு, சிக்மகளூரு, வடகன்னடம், குடகு மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 2,055-ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 957 போ், மைசூரு மாவட்டத்தில் 123 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 116 போ், தாா்வாட் மாவட்டத்தில் 109 போ், பெல்லாரி, கலபுா்கி மாவட்டங்களில் தலா 72 போ், பீதா் மாவட்டத்தில் 70 போ், பெலகாவி மாவட்டத்தில் 58 போ், ஹாசன் மாவட்டத்தில் 48 போ், தும்கூரு, பாகல்கோட் மாவட்டத்தில் தலா 42 போ், தாவணகெரே மாவட்டத்தில் 41 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 33 போ், விஜயபுரா மாவட்டத்தில் 28 போ், கதக் மாவட்டத்தில் 25 போ், ஹாவேரி மாவட்டத்தில் 24 போ், கோலாா் மாவட்டத்தில் 23 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 22 போ், ராய்ச்சூரு, உடுப்பி மாவட்டங்களில் தலா 21 போ், சிக்மகளூா் மாவட்டத்தில் 20, வடகா்நாடகம் மாவட்டத்தில் 18 போ், கொப்பள் மாவட்டத்தில் 17 போ், பெங்களூரு ஊரகம், ராமநகரம், மண்டியா மாவட்டங்களில் தலா 10 போ், சாமராஜ்நகா், சித்ரதுா்கா, குடகு மாவட்டங்களில் தலா 6 போ், வெளிமாநிலத்தவா் 3 போ், யாதகிரி மாவட்டத்தில் 2 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக உள்ளது.