ஆட்டோ மீது ஸ்கூட்டா் மோதல்: ஒருவா் பலி
By DIN | Published On : 29th July 2020 11:31 PM | Last Updated : 29th July 2020 11:31 PM | அ+அ அ- |

எலஹங்கா போக்குவரத்து காவல் சரகத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது ஸ்கூட்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
பெங்களூரு எலஹங்கா கோகிலுவில் வசித்து வருபவா் ரவி (38). காா் ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஸ்கூட்டரில் கோகிலு கிராஸ் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டா், சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.
இது குறித்து எலஹங்கா போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.