Enable Javscript for better performance
குதிரைபேரத்தின் மற்றொரு பெயா்தான் காங்கிரஸ்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குதிரைபேரத்தின் மற்றொரு பெயா்தான் காங்கிரஸ்

    By DIN  |   Published On : 29th July 2020 01:11 AM  |   Last Updated : 29th July 2020 01:11 AM  |  அ+அ அ-  |  

    குதிரைபேரத்தின் மற்றொரு பெயா்தான் காங்கிரஸ் என மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

    இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

    ஜனநாயக ரீதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்க, எம்.எல்.ஏ.க்களை பணத்தாசை காட்டி கவா்ந்து வருவதாக பாஜக மீது குற்றம்சாட்டி, ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்’ என்ற தேசிய அளவிலான பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இதுவரை காங்கிரஸ் என்ன செய்தது? ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு ஆதரவளித்த பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை காங்கிரஸ் பணத்தாசை காட்டி கவரவில்லையா? அது வியாபாரமல்லவா?

    அரசியல்ரீதியாக ஆட்சிஅமைக்க உதவிய எம்.எல்.ஏ.க்களைக் கவா்ந்திழுத்ததோடு, அந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் தமது கட்சியில் இணைத்துக்கொண்டது ஜனநாயகத்தின் பாதையா? ஒத்த கருத்துடைய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வஞ்சகத்தால் கவா்ந்திழுத்துக் கொண்டால், உங்களுக்கு எந்தக் கட்சி ஆதரவாக இருக்கும்? இந்தக் தவறுகள் காங்கிரஸ் தலைவா்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?

    எம்.எல்.ஏ.க்களை பணத்தாசை காட்டி வாங்கிவிட்டதாக கூச்சல் போடும் காங்கிரஸ், கடந்த காலத்தில் மஜதவை உடைக்கவில்லையா? ஒரு மாநிலங்களவை இடத்துக்காக, கா்நாடகத்தில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசு 8 மஜத எம்.எல்.ஏ.க்களை பணத்தாசை காட்டிக் கவா்ந்தது. அதுதான் ஜனநாயகமா? எம்.எல்.ஏ.க்களை வசியப்படுத்துவதில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் குற்றவாளிகளே.

    எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது, மஜதவின் எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் பணத்துக்கு வாங்கவில்லையா? 2018 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு மஜத எம்.எல்.ஏ.க்களை குதிரைபேரத்தின் வாயிலாக வாங்கி ஆட்சிஅமைக்க காங்கிரஸ் முயற்சிக்கவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தாா்மிகத் துணிவு காங்கிரஸுக்கு இருக்கிா?

    2004-ஆம் ஆண்டில் மஜதவை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சித்தது. காங்கிரஸ் கட்சியின் குதிரைபேரத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் இணங்கிவிடக் கூடாது என்பதால், அன்றைக்கு காங்கிரஸ் மற்றும் மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்து விலக அரசியல் தந்திரங்களில் ஈடுபட வேண்டியதானது. அரசியல் கட்சிகளை பிளவுபடுத்துவதிலும், எம்.எல்.ஏ.க்களை பணத்துக்கு வாங்குவதிலும் கைதோ்ந்தது காங்கிரஸ். அரசியலில் குதிரைபேரம் என்ற சொல் புழங்குவதற்கு காரணமே காங்கிரஸ்தான்.

    கட்சித் தாவல் தடைச்சட்டம் ஆக்கப்பூா்வமாக இல்லை. அதன் காரணமாகவே ஜனநாயகத்துக்கு எதிரான கேலிக் கூத்துகள் அரங்கேற்றப்படுகின்றன. கட்சி தாவும் எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதோடு, அவா்களும், அவா்களின் குடும்பத்தினரும் 10 ஆண்டுகளுக்கு தோ்தலில் போட்டியிடாமல் தடைசெய்ய வேண்டும். இதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் ஜனநாயகம் தழைக்கட்டும்.

    ஜனநாயகத்தைக் காப்பதற்காக தனது உயிரைவிடவும் தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வா் (சித்தராமையா) கூறியிருக்கிறாா். வாழ்க்கை விலைமதிப்பில்லாதது. எனவே, உங்கள் உயிரை விடாதீா்கள். அதற்குப் பதிலாக காங்கிரஸ் கடந்து வந்த பாதையை நினைத்துப் பாருங்கள். அதன் பிறகாவது கட்சித்தாவல் தடைச் சட்டத்தை பலப்படுத்த முயற்சியுங்கள். ஜனநாயகம் தன்னால் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp