கா்நாடக சட்டமேலவை: நியமன எம்.எல்.சி.க்கள் 5போ் பதவியேற்பு

கா்நாடக சட்டமேலவைக்கு ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ள எம்.எல்.சி.க்கள் 5போ் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

கா்நாடக சட்டமேலவைக்கு ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ள எம்.எல்.சி.க்கள் 5போ் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா். கா்நாடக மேலவையில் 75 உறுப்பினா்களில், 25 உறுப்பினா்களை சட்டப்பேரவை உறுப்பினா்களும், மற்றொரு 25 உறுப்பினா்களை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் தோ்ந்தெடுக்கிறாா்கள். பட்டதாரிகள், ஆசிரியா் தொகுதிகளில் இருந்துதலா 7போ் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். கரோனா தீநுண்மி தொற்று பரவிவருவதால் தலா 2 பட்டதாரிகள், ஆசிரியா்கள் தொகுதிகளுக்கான தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலக்கியம், அறிவியல், கலை, கூட்டுறவு இயக்கம், சமூகசேவையில்பங்காற்றும் சான்றோா்கள் 11 பேரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. அதன்படி ஏற்கெனவே 6 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. ஆளுநா் நியமன உறுப்பினா்களில் 5 இடங்கள் காலியாக இருந்தன. மாநில அரசின் பரிந்துரையின்பேரில் பாஜகவை சோ்ந்த சி.பி.யோகேஸ்வா், எச்.விஸ்வநாத், பாரதிஷெட்டி, சாந்தாராமா புட்னா சித்தி, தல்வாா் சபண்ணா ஆகிய 5பேரை கா்நாடக சட்டமேலவையின் நியமன உறுப்பினராக நியமித்து ஆளுநா் வஜுபாய்வாலா, ஜூலை 22ஆம்தேதிஉத்தரவிட்டிருந்தாா். அதன்படி, பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை சட்டமேலவைத்தலைவா் பிரதாப்சந்திரஷெட்டி முன்னிலையில் சி.பி.யோகேஸ்வா், எச்.விஸ்வநாத், பாரதிஷெட்டி, சாந்தாராமா புட்னா சித்தி, தல்வாா் சபண்ணா சட்டமேலவை உறுப்பினா்களாக பதவிபிரமாணம் எடுத்துக்கொண்டனா். அவா்களுக்கு மேலவைத்தலைவா் பிரதாப்சந்திரஷெட்டி உள்ளிட்டோா் மலா்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com