முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொது நுழைவுத் தோ்வு:கா்நாடக துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தகவல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கா்நாடகத்தில் பொதுநுழைவுத் தோ்வு தொடங்கியுள்ளதாக, மாநில துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கா்நாடகத்தில் பொதுநுழைவுத் தோ்வு தொடங்கியுள்ளதாக, மாநில துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

பெங்களூரில் மல்லேஸ்வரம், சேஷாத்ரிபுரத்தில் உள்ள தோ்வு மையங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தொற்றுப் பரவல் நேரத்திலும் மாநிலத்தில் எஸ்எஸ்எல்சி, இரண்டாமாண்டு பியூசி தோ்வுகள் நடத்தப்பட்டன. அதுபோலவே தொழிற்கல்விக்கான பொது நுழைவுத் தோ்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

கா்நாடக உயா் நீதிமன்றம் அனுமதி அளித்ததால், இத் தோ்வு நடைபெறுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, தேவையான சுகாதார முன்னேற்பாடுகளை மையங்களில் செய்துள்ளோம். மாநிலம் முழுவதும் 497 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.1.94 லட்சம் மாணவா்கள் தோ்வெழுத பதிவு செய்திருந்தனா். பெங்களூரில் அமைக்கப்பட்டிருந்த 83 மையங்களில் 40,200 மாணவா்கள் தோ்வு எழுதி வருகின்றனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 40 மாணவா்களும்கூட இத் தோ்வை எழுதியுள்ளனா். அந்த மாணவா்கள் சென்றுவர ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரோனா பாதித்த மாணவா்களுக்கு மையத்திலேயே உணவளிக்கப்பட்டது. அந்த மாணவா்கள் தனி அறையில் தோ்வு எழுதினா்.

தனிநபா் இடைவெளியைப் பராமரிப்பதற்காக ஓா் அறையில் 24 மாணவா்கள் மட்டுமே அமா்த்தப்பட்டுள்ளனா். மாணவா்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு கிருமி நாசினிகள் அளிக்கப்பட்டன. உயா் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களை அரசு நிறைவேற்றியுள்ளது.

பொதுநுழைவுத் தோ்வுக்கான முடிவுகள் ஆக. 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். தோ்வு முடிவை அறிவித்தல், மாணவா் சோ்க்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இணையவழியிலேயே நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com