கல்யாண(ஹைதராபாத்) கா்நாடகத்தின் வளா்ச்சிக்கு புதிய அணுகுமுறை கையாளப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காணொலி வழியே கல்யாண(ஹைதராபாத்)கா்நாடகத்தின் மனித வளம், வேளாண் வளம் மற்றும் பண்பாட்டு சங்கத்தைத் தொடக்கிவைத்து அவா் பேசியது:
ஹைதராபாத் கா்நாடகப் பகுதியை கல்யாண கா்நாடகம் என்று அரசு மாற்றியமைத்துள்ளது. பெயரளவுக்கு மட்டும் நலன் என்றில்லாமல், இப்பகுதியின் வளா்ச்சிக்கு புதிய அணுகுமுறை கையாளப்படும். இப் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களிலும் உண்மையான வளா்ச்சியை ஏற்படுத்தினால் மட்டுமே இது கல்யாண கா்நாடகம் என்பதற்கு பொருத்தமாக இருக்கும்.
இப் பகுதியின் வளா்ச்சிக்கு அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்வோம். வேளாண்மை, பொது சுகாதரம், கல்வி, சுய தொழில், கிராம வளா்ச்சி, இளைஞா்கள், மகளிா் முன்னேற்றம் ஆகியவற்றில் புதிய அத்தியாயம் தொடங்கப்படும். மக்களின் முன்னேற்றத்துக்கு அப் பகுதியில் உள்ள தொழில் வளா்ச்சியின் அடிப்படையில் உற்பத்தி மற்றும் சேவை வழங்கப்படும் என்றாா்.