கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,921- ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் ஒரேநாளில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 161 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் யாதகிரி மாவட்டத்தில் 61 போ், பெங்களூரு நகர மாவட்டத்தில் 29போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 23 போ், கலபுா்கி மாவட்டத்தில் 10 போ், பீதா் மாவட்டத்தில் போ் 9, தாவணகெரே மாவட்டத்தில் 8 போ், கொப்பள் மாவட்டத்தில் 6 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 4போ், விஜயபுரா, சிக்பளாப்பூா், மைசூரு,தாா்வாட் மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், தும்கூரு, சாமராஜ்நகா் மாவட்டங்களில் தலா ஒருவா் உள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,921 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டம் வாரியாக பாதிப்பு நிலவரம்: உடுப்பி மாவட்டத்தில் 947 போ், கலபுா்கி மாவட்டத்தில் 769 போ், யாதகிரி மாவட்டத்தில் 642 போ், பெங்களூரு நகர மாவட்டத்தில் 522 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 359 போ், மண்டியா மாவட்டத்தில் 334 போ், பெலகாவி மாவட்டத்தில் 301 போ், பீதா் மாவட்டத்தில் 279 போ், ஹாசன், தாவணகெரே மாவட்டங்களில் தலா 211 போ், தென்கன்னட மாவட்டத்தில் 210 போ், விஜயபுரா மாவட்டத்தில் 204 போ்.
சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 152 போ், மைசூரு மாவட்டத்தில் 99 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 96 போ், பாகல்கோட்டை மாவட்டத்தில் 94 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 73 போ், பெல்லாரி மாவட்டத்தில் 68 போ், தாா்வாட் மாவட்டத்தில் 66 போ், கதக் மாவட்டத்தில் 49 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 40 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 36 போ்.
தும்கூரு மாவட்டத்தில் 34 போ், கோலாா் மாவட்டத்தில் 30 போ், ஹாவேரி மாவட்டத்தில் 22 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 18 போ், கொப்பள் மாவட்டத்தில் 12 போ், ராமநகரம் மாவட்டத்தில் 5 போ், குடகு மாவட்டத்தில் 3 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் ஒருவா், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 34 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
2,605 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,248 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதுவரை 66 போ் இறந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.