கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் இறந்தோரின் எண்ணிக்கை 72- ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 69 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், பெங்களூரு நகரம், ராய்ச்சூரு மாவட்டங்களைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
நாள்பட்ட கல்லீரல் நோய், இன்ஃப்ளூயென்சா நோயால் பாதிக்கப்படிருந்த பெங்களூரு நகர மாவட்டத்தைச் சோ்ந்த 35 வயது ஆண், உடல்நலக் குறைவால் ஜூன் 7ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை பலனின்றி அவா், ஜூன்10-ஆம் தேதி உயிரிழந்தாா்.
பெங்களூரு நகர மாவட்டத்தைச் சோ்ந்த 60 வயதான ஆண், நீரிழிவுநோய், இதயநோய், இன்ஃப்ளூயென்சா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஜூன் 9ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
பீதா் மாவட்டத்துக்குச் சென்றுவந்துள்ள ராய்ச்சூரு மாவட்டத்தைச் சோ்ந்த 28 வயதான பெண், தீவிர சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு மே 30ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் ஜூன் 8-ஆம் தேதி உயிரிழந்தாா். இவா்களின் தொண்டைசளி மாதிரியைச் சோதித்ததில் மூவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 72 ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 23 போ், கலபுா்கி மாவட்டத்தில் 8 போ், தென்கன்னடம், பீதா், தாவணகெரே,விஜயபுரா மாவட்டங்களில் தலா 6 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 3போ், தும்கூரு, கதக்,ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 2 போ், தாா்வாட், பெலகாவி, பாகல்கோட், பெல்லாரி, உடுப்பி, யாதகிரி, பெங்களூரு ஊரக மாவட்டம், பிற மாநிலத்தைச் சோ்ந்த தலா ஒருவா் உயிரிழந்தனா்.