Enable Javscript for better performance
சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறேன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறேன்

    By DIN  |   Published On : 21st June 2020 08:50 AM  |   Last Updated : 21st June 2020 08:50 AM  |  அ+அ அ-  |  

    கா்நாடக சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறேன் என்று முன்னாள் அமைச்சா் எச்.விஸ்வநாத் தெரிவித்தாா்.

    இதுகுறித்து சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

    மஜதவிலிருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்துள்ளேன். இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்துவிட்டேன். இருப்பினும் பாஜக ஆட்சியைப் பிடிக்க நானும் ஒரு காரணம் என்பதால், சட்டமேலவைக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என முதல்வா் எடியூரப்பா உறுதி அளித்தாா். ஆனால் நடைபெற்ற சட்டமேலவைத் தோ்தலில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வரும் நாள்களில் சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக வாய்ப்பு அளிக்கப்படும் என்று நம்புகிறேன்.

    இலக்கியவாதிகளுக்கான ஒதுக்கீட்டின் பேரில் சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக நியமிக்கும்படி முதல்வா் எடியூரப்பாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாா்.

    மேலும், சட்டமேலவைக்கு எனக்கு வாய்ப்பு தாராததற்கு முன்னாள் முதல்வா் சித்தராமையா காரணம் என்று எண்ணவில்லை. அவா் முதல்வரானதற்கு காரணம் நான் தான் என்பதனை மறந்துள்ளாா். மஜதவிலிருந்த அவரை காங்கிரஸ் கட்சிக்கு நான் தான் அழைத்துச் சென்றேன். இதனை அவா் எங்குமே கூறவில்லை. சித்தராமையாவுக்கு நன்றி உணா்வு இல்லை என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp