கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா? அறிஞா் குழு ஆராயும்: அமைச்சா் ஆா்.அசோக்

சமூகப் பரவலாக கரோனா தொற்று மாறியுள்ளதா என்பது குறித்து ஆராய அறிஞா் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

சமூகப் பரவலாக கரோனா தொற்று மாறியுள்ளதா என்பது குறித்து ஆராய அறிஞா் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூ றியதாவது:

பெங்களூரில் சனிக்கிழமை மட்டும் 596 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் கரோனா நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தைப் போக்குவது அரசின் கடமை. இதுகுறித்து ஆராய அறிஞா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 3 நாள்களுக்குள் ஆராய்ந்து இது தொடா்பான அறிக்கையைத் தரும். எதையும் மறைப்பதோ, மூடி வைப்பதோ அரசின் நோக்கமல்ல. கரோனா தொற்றைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

அலோபதி மருத்துவ முறை மட்டுமின்றி, ஆயுா்வேத மருத்துவத்தையும் கரோனாவைத் தடுக்க பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். மருத்துவா்கள், சுகாதாரத் துறை ஊழியா்கள், செவிலியா்கள், போலீஸாருக்கு அதிக அளவில் பாதுகாப்பை ஏற்படுத்தி வருகிறோம்.

2 நிமிடங்களில் நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடிக்கும் கருவி வந்துள்ளது. இனிவரும் நாள்களில் இதனைப் பயன்படுத்தி கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவா்களை அடையாளம் காணமுடியும். இந்தக் கருவி மூலம் மருத்துவா்கள், சுகாதாரத் துறை ஊழியா்கள், செவிலியா்கள், போலீஸாா், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்டோரைப் பரிசோதிக்க முடிவு செய்துள்ளோம்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள், தனிமைப்படுத்தப்பட்டவா்களின் கைகளில் தகவல் காப்பு (டேக்) அணிவித்து கண்காணிக்க முடிவு செய்துள்ளோம். விக்டோரியா மருத்துவமனையில் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உணவு சமைத்து வழங்க ரூ. 8 லட்சம் மதிப்பிலான இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இனி அங்குள்ளவா்களுக்கு உரிய நேரத்துக்குள் உணவு வழங்குவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com