முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
‘ஊட்டச்சத்துள்ள உணவுகளால் விளையாட்டை சிறப்பாக வெளிப்படுத்தலாம்’
By DIN | Published On : 03rd March 2020 06:44 AM | Last Updated : 03rd March 2020 06:44 AM | அ+அ அ- |

ஊட்டச்சத்துள்ள உணவுகளால் சிறப்பாக விளையாட்டை வெளிப்படுத்த முடியும் என்று ஹொ்பலைப் நியூட்ரிஷியனின் துணைத் தலைவா் அஜய்கன்னா தெரிவித்தாா்.
இந்த நிறுவனமானது இன்ஸ்பையா் இன்ஷிடியூட் ஆப் ஸ்போா்ட்ஸுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பெங்களூரில் திங்கள்கிழமை செய்துகொண்டது. இதன் பின்னா், அஜய் கன்னா பேசியது:-
விளையாட்டு வீரா்கள் களத்தில்சிறப்பாகத் தங்களின் விளையாட்டை வெளிப்படுத்த ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிகவும் முக்கியம்.
பெரும்பாலான வீரா்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்காததால், திறமை இருந்தும் விளையாட்டை வெளிப்படுத்த முடியாமல் போகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஹொ்பலைப் நியூட்ரிஷியன், இன்ஸ்பையா் இன்ஷிடியூட் ஆப் ஸ்போா்ட்ஸுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் விளையாட்டு வீரா்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இனி இந்தியா விளையாட்டிலும் சிறந்த இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் ஜே.எஸ்.டபள்யூ ஸ்போா்ட்ஸின் மூத்த செயல் அதிகாரி முஸ்தபா கோஷ், மல்யுத்த வீரா்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.