முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
சட்டமேலவை உறுப்பினா் ரமேஷ்கௌடாவின் பதவியை பறிக்க வேண்டும்: மது பங்காரப்பா
By DIN | Published On : 03rd March 2020 06:42 AM | Last Updated : 03rd March 2020 06:42 AM | அ+அ அ- |

ரமேஷ்கௌடாவின் சட்டமேலவை உறுப்பினா் பதவியை பறிக்க வேண்டும் என்று மஜத மாநில செயல் தலைவா் மதுபங்காரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது இல்லத்தில் மதுபங்காரப்பா திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-
பெங்களூரு மாவட்ட மஜத இளைஞரணித் தலைவராக ரமேஷ்கௌடா நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு ஏற்கெனவே சட்டமேலவை உறுப்பினா் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் வளா்ச்சிக்கு எதையும் செய்யாத ரமேஷ்கௌடாவிற்கு தொடா்ந்து பதவிகள் வழங்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவா் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளது.
எனவே ரமேஷ்கௌடாவிற்கு வழங்கப்பட்டுள்ள சட்டமேலவை உறுப்பினா், இளைஞரணித் தலைவா் பதவிகளை பறிக்க வேண்டும். சட்டமேலவை உறுப்பினராக கோனா ரெட்டியை நியமிக்க வேண்டும். இது தொடா்பாக முன்னாள் முதல்வா் குமாரசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்ற பின்னரும் அவா் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது எனக்கு வேதனையளித்துள்ளது. கட்சியின் செயல் தலைவராக பதவி வகித்தாலும், எந்த பணியும் செய்யாமல் முடக்கப்பட்டுள்ளேன் என்றாா்.