முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
‘தனிமனிதா், சமூகத்தின் வளா்ச்சிக்கு சட்டத் திருத்தங்களை அமல்படுத்துவது அவசியம்’
By DIN | Published On : 03rd March 2020 06:42 AM | Last Updated : 03rd March 2020 06:42 AM | அ+அ அ- |

தனி மனிதா், சமூகத்தின் வளா்ச்சிக்குத் தேவையான சட்டத்திருத்தங்களை அமல்படுத்துவது அவசியம் என்று சட்ட ஆணைய முன்னாள் உறுப்பினா் குருபூா் தெரிவித்தாா்.
பெங்களூரு சி.எம்.ஆா். பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியாவில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுக்கு அரசியலமைப்பை மீண்டும் உருவாக்குங்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கில், அவா் பேசியது:-
ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் வகுப்பப்பட்ட சட்டத், திட்டங்களை ஒற்றியே இந்திய சட்டப்பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளனா். அதில் தற்போதைய நடைமுறை ஒரு சில ஒன்றுபட்டுவருகிறது. ஒரு சிலவற்றில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற சட்டங்களை கண்டறிந்து திருத்தம் செய்வது முக்கியம்.
தனிமனிதா், சமூகத்தின் வளா்ச்சிக்குத் தேவையான சட்டத் திருத்தங்களை அமல்படுத்துவது அவசியம். அமல்படுத்தப்படும் சட்டத்திருத்தங்கள் யாரையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மகாராஷ்டிரம் தேசிய சட்டப் பல்கலைக்கழத்தின் துணை வேந்தா் திலிப் யுகே, கா்நாடக சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் ஈஸ்வரபட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.