முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
விபத்தில் மாணவா் பலி
By DIN | Published On : 03rd March 2020 06:44 AM | Last Updated : 03rd March 2020 06:44 AM | அ+அ அ- |

விபத்தில் மாணவா் உயிரிழந்தாா். மேலும், 5 போ் காயம் அடைந்தனா்.
பெங்களூரு எலஹங்கா அருகே உள்ள விமானநிலையச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று, சாலை தடுப்புச்சுவரில் மோதியது. பின்னா், 3 காா்கள் மீது மோதி தொடா் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், பாகல்கோட்டையைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா் ராமசந்திரா (23) என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுதவிர, காயம் அடைந்த பூஜா, சாய்குமாா், நவீன், முரளிதா், நிரஞ்சன் ஆகிய 5 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து எலஹங்கா போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.