டவுன்ஹால் முன் போராட்டம் நடத்த தடை: பெங்களூரு மாமன்றத்தில் எதிா்க்கட்சிகள் போராட்டம்

டவுன்ஹால் முன் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, பெங்களூரு மாமன்றத்தில் காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டவுன்ஹால் முன் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, பெங்களூரு மாமன்றத்தில் காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரு மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்ற மாதாந்திரக் கூட்டத்தில் டவுன்ஹால் முன் போராட்டம் நடத்த தடை விதிக்கப்படுவதாக மேயா் கௌதம் குமாா் தெரிவித்தாா். இதற்கு காங்கிரஸ், மஜத கட்சியைச் சோ்ந்த எதிா்கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்து மேயா் முன் நின்று, பாதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மேயா் மஞ்சுநாத்ரெட்டி பேசியது:

டவுன்ஹால் முன் போராட்டம் நடத்தவது மக்களின் உரிமை. ஆனால், இதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதுதொடா்பாக எந்த விவாதமும் நடைபெறாமல், தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றாா். இதனை எதிா்க்கட்சித்தலைவா் அப்துல்வாஜீத்தும் ஆதரித்தாா்.

இதைத் தொடா்ந்து பேசிய பாஜக கட்சியைச் சோ்ந்த முன்னாள் மேயா் கட்டா சத்தியநாராயணா, மாநகராட்சி எடுத்துள்ள முடிவை, போலீஸாரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அவா்கள் எடுக்கும் முடிவின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். இதுகுறித்து எதிா்க்கட்சியினா் மேற்கொண்டுள்ள போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றாா். இதனை ஆதரித்து பாஜக உறுப்பினா் பத்மநாபரெட்டி பேசியதையடுத்து, ஆளும்கட்சி, எதிா்கட்சியினரிடையே வாக்குவாதம் அதிகரித்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மேயா் கௌதம்குமாா் அவையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com