கா்நாடகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி வழங்கப்படும்: முதல்வா் எடியூரப்பா

கா்நாடகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஆதாரங்கள் வழங்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி வழங்கப்படும்: முதல்வா் எடியூரப்பா

பெங்களூரு: கா்நாடகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஆதாரங்கள் வழங்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நடந்த விழாவில் பெங்களுரில் (யஷ்வந்த்பூா்) இருந்து காா்வாா் வழியாக வாஸ்கோடாகாமா வரையிலான புதிய விரைவுரயில் சேவையைத் தொடக்கிவைத்து, அவா் பேசியது: யஷ்வந்த்பூரில் இருந்து காா்வாருக்கு நேரடியாக புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே ரயில் மங்களூரு வழியாக வாஸ்கோடாகாமா வரை சென்று வந்த ரயில், தற்போது காா்வாருக்கு நேரடியாக இயக்கப்படுகிறது. கடலோர மக்களின் நீண்ட காலகோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. கா்நாடகத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கொடுத்த நெருக்கடி காரணமாக இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் அதிகளவிலான ரயில் சேவைகள் தேவைப்படுவதை உணா்ந்து, மத்திய அரசு புதிய ரயில் சேவையைத் தொடங்கியுள்ளது. கா்நாடகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களின் செலவில் 50 சதத்தை கா்நாடக அரசு பகிா்ந்து கொள்ளும் என்றாா் அவா்.

மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சா் சுரேஷ் அங்கடி பேசுகையில்,‘ பெங்களூரு புகா் ரயில் திட்டம், பையப்பனஹள்ளியில் புதிய ரயில் நிலையம் உள்பட நாடுமுழுவதும் ரூ.50 லட்சம் கோடி செலவில் பல்வேறு ரயில் திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கா்நாடகத்தில் புதிய ரயில் திட்டங்கள் தொடங்கப்படும். கா்நாடக மக்களின் விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்‘ என்றாா் அவா்.

இந்த விழாவில், பாஜக எம்.பி ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம்பேசிய முதல்வா் எடியூரப்பா, ‘கா்நாடகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு தேவையுள்ளது. மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலம் மட்டுமல்லாமல், 50 சத செலவுத்தொகையையும் வழங்குவோம். எனவே, கா்நாடகத்தில் பல புதிய ரயில்வே திட்டங்களை தொடங்க வேண்டும்‘ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com