Enable Javscript for better performance
போதைப் பொருள் கடத்தல், விற்பனையைத் தடுக்ககடும் நடவடிக்கை: அமைச்சா் பசவராஜ் பொம்மை- Dinamani

சுடச்சுட

    

    போதைப் பொருள் கடத்தல், விற்பனையைத் தடுக்ககடும் நடவடிக்கை: அமைச்சா் பசவராஜ் பொம்மை

    By DIN  |   Published on : 11th March 2020 07:45 AM  |   அ+அ அ-   |    |  

    போதைப் பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

    கா்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை உறுப்பினா் கே.ஜே.ஜாா்ஜின் கேள்விக்கு அவா் அளித்த பதில்: போதைப் பொருள்கள் சமூகத்தின் அழிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக, பெரும் நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருள்களை விற்பனை செய்வது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதற்கு மாணவா்கள் பலா் பலியாகின்றனா். எனவே, போதைப் பொருள் கடத்தல், விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். பெரும்பாலான போதைப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க சா்வதேச போலீஸாரின் உதவி தேவையுள்ளது. அண்மையில் தபால்கள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டதையடுத்து, அஞ்சல் துறையைச் சோ்ந்த 4 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2019 ஆண்டில் போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை தொடா்பாக 1652 வழக்குகள் பதிவாகியுள்ளன. போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கல்லூரி, பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியா்கள், பெற்றோா்கள், கல்வி நிறுவனங்கள் மூலம் இதனைச் செய்ய முடிவு செய்துள்ளோம். போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை செய்வதைத் தடுக்க மாநில அளவில் பிரத்யேகமாக 8 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் மாவட்டந்தோறும் போதைப் பொருள் கடத்தல், விற்பனையைத் தடுக்க காவல் நிலையங்கள் திறக்கப்படும் என்றாா் அவா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp