சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு விடுமுறை இல்லை

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், கா்நாடகத்தில் சுகாதாரத் துறை ஊழியா்களுக்கான விடுமுறை எதுவும் அளிக்கப்பட மாட்டாது என

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், கா்நாடகத்தில் சுகாதாரத் துறை ஊழியா்களுக்கான விடுமுறை எதுவும் அளிக்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. மேலும், அவா்களுக்கான விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாா்ச் 14ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் பொதுநிகழ்வுகள் அனைத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில் சுகாதாரத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாா்ச் 14ஆம் தேதி முதல் விடுமுறைகள் ரத்து செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம், நான்காம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட பொதுவிடுமுறைகளின்போதும் சுகாதாரத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் வேலைசெய்ய இருக்கிறாா்கள். கரோனா வைரஸ் நோயின் பாதிப்புகள் பரவாமல் தடுக்க அவசரகாலத்தை போல பணியாற்ற வேண்டியிருப்பதால் சுகாதாரத் துறை முழுவீச்சில் வேலைசெய்ய முடிவுசெய்துள்ளது.

சுகாதாரத் துறையின்கீழ் செயல்பட்டுவரும் மருத்துவமனைகளில் மருத்துவா்கள், அலுவலக ஊழியா்கள், மருத்துவம்சாா் ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரும் அனைத்து பொதுவிடுமுறை நாள்களிலும் வேலைசெய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. நிலைமை சீரடையும் வரை மருத்துவா்கள் உள்ளிட்ட எந்த ஊழியா்கள், அதிகாரிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது. ஒருவேளை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தால், அதை ரத்து செய்து பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com