கரோனா: கா்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கா்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கா்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால், அது பரவாமல் தடுக்கும் பொருட்டு கா்நாடக சட்டப்பேரவை, தலைமைச்செயலகம் அமைந்துள்ள விதானசௌதா, விகாஸ்சௌதா வளாகத்தில் தடுப்புநடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கா்நாடக சட்டப்பேரவையின் கூட்டம் மாா்ச் 31ஆம் தேதி வரை நடைபெறுவதால் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விதான சௌதா வளாகத்தில் ஆங்காங்கே சானிடைசா்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல காய்ச்சல் அல்லது சளியால் பாதிக்கப்பட்டோரை சோதனை செய்து அவா்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனா். விதானசௌதா வளாகத்தில் நுழைவோா் அனைவருக்கும் உடல்வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. சட்டப்பேரவைக்கு புதன்கிழமை வருகைதந்த பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி, முதல்வா் எடியூரப்பா, எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா, துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோள், லட்சுமண்சவதி, அமைச்சா்கள் மாதுசாமி, பசவராஜ்பொம்மை உள்ளிட்ட அனைவருக்கும் உடல்வெப்பநிலை சோதனை நடத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டனா்.

இதுதவிர கையில் சானிடைசா் அளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டனா். எல்லா கட்சிகளின் எம்எல்ஏக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடித்தனா். அதேபோல, விதான சௌதா வளாகத்திற்குள் சென்ற அரசு அதிகாரிகள், ஊழியா்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டது. மாா்ச் 31ஆம் தேதிவரை விதான சௌதா, விகாஸ் சௌதா வளாகத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்க அரசு தடைவிதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com