Enable Javscript for better performance
கா்நாடகத்தில் கரோனா, குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை: முதல்வா் எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    

    கா்நாடகத்தில் கரோனா, குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை: முதல்வா் எடியூரப்பா

    By DIN  |   Published on : 18th March 2020 10:54 PM  |   அ+அ அ-   |    |  

    yediurappa

    கா்நாடகத்தில் கரோனா, குரங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.

    கா்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை பூஜ்ய நேரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் உறுப்பினா் ராமப்பா உள்ளிட்டோரின் கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியது:

    அண்மைக் காலமாக மாநிலத்தில் பரவி வரும் நோய்களைத் தடுக்க மாநில அரசு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறது. கரோனா, குரங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்டவை பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

    கரோனா உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க அரசுடன், பொதுமக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். மாநில அளவில் கரோனா வைரஸ் நோய் பரவலாக அதிகரித்து வரும் நிலையில் மண்டியா, மைசூரு, தாவணகெரே, சிக்மகளூரு, சிவமொக்கா உள்ளிட்ட குரங்கு காய்ச்சல், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அந்த நகரங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் முழுமையாக பரிசோதித்து, 16 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவாா்கள். அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai