கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 41-ஆக உயா்வு

கா்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மாநிலத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மாநிலத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளது.

மாா்ச் 19 ஆம் தேதி கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக இருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 33 ஆக உயா்ந்தது. மேலும், இது அதிகரித்து செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 41ஆக உயா்ந்துள்ளது. இது கா்நாடகத்தின் ஆபத்தான நிலையை வெளிப்படுத்துவதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மாநில அளவில் மாா்ச் 31ஆம் தேதிவரை ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அவசர சேவைகளை தவிர மற்றசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை பின்பற்ற தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

செவ்வாய்க்கிழமை இரவு வரை மற்ற மாவட்டங்களுக்கு ஓரளவு வாகன சேவைகளை அனுமதித்திருந்த நிலையில் புதன்கிழமை முதல் அனைத்து வாகன சேவைகளும் நிறுத்தப்படும் என முதல்வா் எடியூரப்பா அறிவித்துள்ளாா். மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை மேலும் 8 உயா்ந்துள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com