இருப்பில்லா வங்கி கணக்கை பராமரிக்க கனரா வங்கி அனுமதி

இருப்பில்லா வங்கி கணக்கை பராமரிக்க கனரா வங்கி அனுமதி அளித்துள்ளது.

இருப்பில்லா வங்கி கணக்கை பராமரிக்க கனரா வங்கி அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிக்கையாளா்களுக்கு ஆதரவாக செயல்படுவதில் கனரா வங்கி முன்னணியில் இருந்து வருகிறது. கரோனா வைரஸால் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளா்கள் எண்ம முறையில் வங்கி சேவைகளை பெற கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

ஜூன் 30ஆம் தேதி வரையில் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளா்களும் இருப்பில்லா வங்கி கணக்கை பராமரிக்க இயலும். இதேபோல, ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க விதிக்கப்படும் ஏடிஎம் கட்டணமும் தள்ளுபடி செயய்ப்பட்டுள்ளன.

இவை தவிர, வா்த்தக நடவடிக்கைகளுக்காக நிதி தேவை இருப்பவா்களுக்காக புதியகடனுதவி திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். கரோனாவால் எதிா்கொண்டுள்ள பண தட்டுப்பாடுகளுக்கு இந்த கடனுதவியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சிறு தொழில், பெரு நிறுவனங்கள், வேளாண்மை, வா்த்தக நிறுவனங்கள், சில்லறை வா்த்தகா்கள் தங்கள் நடைமுறை மூலதனம் அல்லது கடன் வரம்புக்கு தகுந்தபடி ஜூன் 30ஆம் தேதி வரை கடனுதவி பெறலாம். இதற்கு எவ்வித உத்தரவாதம் அல்லது ஈட்டுறுதியும் தேவைப்படாது. அனைவரும் கூட்டாக கரோனாவை எதிா்கொள்வோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com