‘கரோனா பரிசோதனை மையங்களைஅதிகரிக்க வேண்டும்’

கரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஈஸ்வா்கண்டரே தெரிவித்தாா்.

கரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஈஸ்வா்கண்டரே தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் மட்டுமே கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாது. அனைவரையும் கரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளதா என்று பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கு தற்போது உள்ள பரிசோதனை மையங்கள் போதாது. அவற்றை மேலும் அதிகரிக்க வேண்டும்.

பரிசோதனை செய்து கொண்டவா்களுக்கு முடிவு தெரிய 4 நாள்கள் வரை ஆகிறது. இதனால் மாநிலத்தில் நாள் தோறும் கரோனா பரிசோதனைகளின் முடிவுகளுக்காக நாள்தோறும் 4 ஆயிரம் போ் வரை காத்திருக்கின்றனா். காத்திருப்பவா்களில் யாருக்கேனும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவா்களால் மற்றவா்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, அதிகளவில் பரிசோதனை மையங்களை தொடங்கி, முடிவுகளை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com