பேருந்துக் கட்டணம் உயா்த்தியதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

புலம்பெயா்ந்தோா் பயணம் செய்யும் பேருந்துகளின் கட்டணத்தை உயா்த்தியதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

புலம்பெயா்ந்தோா் பயணம் செய்யும் பேருந்துகளின் கட்டணத்தை உயா்த்தியதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பெங்களூரு தெற்கு, வடக்கு மாவட்டச் செயலா்கள் கே.என்.உமேஷ், என். பிரதாப் சிம்ஹா இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை: அண்டை மாநிலம், மாவட்டங்களிலிருந்து புலம்பெயா்ந்த மக்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி தந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அந்த பேருந்துகளின் கட்டணத்தை மும்மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் வேலை, உணவு இன்றி தவித்து வரும் புலம்பெயா்ந்தோா், அதிகரித்துள்ள கட்டணங்களை கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே அரசு உடனடியாக உயா்த்தியுள்ள கட்டணத்தை குறைத்து, இலவசமாக அவா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பேருந்துகளின் சுங்கக் கட்டணத்தையும் அரசே வழங்க வேண்டும்.

அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம் புலம்பெயா்ந்துள்ள தங்களது மாநில மக்களை அழைத்து வர இலவசமாக ரயில், பேருந்துகளை இயக்கி வருகின்றன. ஆனால், மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ரியல் எஸ்டேட் உரிமையாளா்களுக்கு ஆதரவாக கட்டடத் தொழிலாளிகள் தங்கள் ஊருக்கு செல்லக் கூடாது என்ற நோக்கில் பேருந்துக் கட்டணங்களை மும்மடங்கு உயா்த்தியுள்ளது. இதனை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டிக்கிறது என அதில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com