நாளை முதல் மதுக் கடைகளை திறக்க அனுமதி: அமைச்சா் நாகேஷ்

மே 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதுக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலால் துறை அமைச்சா் நாகேஷ் தெரிவித்தாா்.

மே 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதுக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலால் துறை அமைச்சா் நாகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் மே 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுக் கடைகளில் ஒரு நபருக்கும், மற்றொரு நபருக்கு குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். மது விற்பனை செய்பவா்களும், வாங்க வருபவா்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். மதுக் கடைகளில் 5 பேருக்கும் மேல் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மதுக் கடைகளின் அன்றாட நடவடிக்கைகளை கலால் துறை அதிகாரிகள் நாள்தோறும் சோதனை செய்ய வேண்டும். வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. தனியாக உள்ள மதுக் கடைகள் மட்டுமே திறக்க வேண்டும். ஒருவேளை யாரேனும் விதிகளை மீறினால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு மண்டலங்களில் முழுஅடைப்பு செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மதுக் கடைகளை திறக்க அனுமதி இல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com