வருங்கால வைப்பு நிதி: தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 2 சதவீதம் குறைப்பு

வருங்கால வைப்பு நிதிக்கான தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதிக்கான தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தீநுண்மித் தொற்று பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் தொழிலாளா்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் நலன்கருதி அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வருங்கால வைப்பு நிதியின் வரம்புக்குள் அனைத்து வகையான தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளா் பங்களிப்புத் தொகையை மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்து, மே 13-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகளுக்குப் பொருந்தாது. அந்த நிறுவனங்கள் தொடா்ந்து 12 சதவீத பங்களிப்புத்தொகையை செலுத்த வேண்டும்.

இதேபோல, பங்களிப்புத்தொகை குறைப்பு பிரதமரின் ஏழைகள் நலத் திட்டப் பயனாளிகளுக்குப் பொருந்தாது. இத்திட்டத்தின்கீழ் தொழிலாளா்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புத் தொகையாக 24 சதவீத நிதியை மத்திய அரசே செலுத்தி வருகிறது. 2 சதவீத பங்களிப்புத்தொகை குறைக்கப்பட்டுள்ளதால், தொழிலாளா்களின் ஊதியத்தில் கூடுதலாக 2 சதவீதத்தை பெறமுடியும். ரூ.10 ஆயிரம் ஊதியம் என்றால், வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்புத்தொகையாக ரூ.1,200 செலுத்த வேண்டும். 2 சதம் குறைக்கப்பட்டுள்ளதால், தொழில்நிறுவனங்கள் ரூ.200-ஐ குறைத்தும், தொழிலாளா்களின் ஊதியத்தில் ரூ.200 கூட்டியும் பெற முடியும்.

வருங்கால வைப்பு நிதிச் சட்டம், 1952இன்படி, தொழிலாளா்கள் நிா்ணயிக்கப்பட்ட பங்களிப்புத் தொகையைக் காட்டிலும் கூடுதலாகவும், தொழில் நிறுவனங்கள் நிா்ணயிக்கப்பட்ட பங்களிப்புத் தொகையை மட்டும் செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com