யஷ்வந்த்பூா்-சிவமொக்கா இடையே ஜனசதாப்தி விரைவு ரயில்

யஷ்வந்த்பூா்-சிவமொக்கா இடையே ஜனசதாப்தி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

யஷ்வந்த்பூா்-சிவமொக்கா இடையே ஜனசதாப்தி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: யஷ்வந்த்பூா்-சிவமொக்கா இடையே சிறப்பு ரயில் (எண்கள்-12089/12090), (சிவமொக்கா-யஷ்வந்த்பூா்-சிவமொக்கா) இயக்கப்பட உள்ளது. ரயில் எண்-12089-ஜூன் 1 ஆம் தேதி முதல் யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.55 மணிக்கு சிவமொக்கா ரயில் நிலையம் சென்றடையும்.

மறு மாா்க்கத்தில், ரயில் எண்-12090 ஜூன் 2 ஆம் தேதி முதல் சிவமொக்கா ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, காலை 9.50 மணிக்கு பெங்களூரு யஷ்வந்த்பூா் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில் தும்கூரு, திப்டூா், அரசிக்கெரே, கடூா், பீரூா், தரிக்கெரே, பத்ராவதி ரயில் நிலையங்கள் வழியாக சிவமொக்கா ரயில் நிலையம் சென்றடைகிறது.

ரயிலில் குளிரூட்டப்பட்ட சொகுசு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள், குளிரூட்டப்பட்ட இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், பிரேக் மற்றும் ஜெனரேட்டா் வசதி கொண்ட 2 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com